"நாடு முழுக்க ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்" -பிரதமர் மோடி உத்தரவு
மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பது விநியோகிப்பது தொடர்பான தடைகளை அகற்றும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
மோடி தலைமையில் உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அமைச்சரவைச் செயலர், உள்துறை செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இதில் கலந்துக் கொண்டனர். ஆக்சிஜன் விநியோகம் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
20 மாநிலங்களுக்கு புதன்கிழமை முதல் 6 ஆயிரத்து 822 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திரவ ஆக்சிஜன் உற்பத்தியும் தினசரி 3 ஆயிரத்து 300 மெட்ரிக் டன் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பது விரைவாக விநியோகிப்பது மற்றும் ஆக்சிஜன் பயன்பாட்டில் புதிய வழிமுறைகளைக் கையாள்வது ஆகிய மூன்று அம்ச திட்டங்களை பிரதமர் வலியுறுத்தினார்.
Comments